ரோல்ஸ் ராய்ஸை அசால்டாக ஓட்டும் மனியம்மா..! துபாயை அதிர வைக்கும் 74 வயது டிரைவர் பாட்டி..

Published : Aug 30, 2025, 02:40 PM IST
dubai women driver

சுருக்கம்

74 வயதான மனியம்மா, துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை இயக்கி உலகை வியக்க வைத்துள்ளார். 11 வகையான வாகனங்களை ஓட்டும் உரிமம் பெற்று, டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார்.

Rolls Royce Maniyamma Dubai : சாலைகளில் நாளுக்கு நாள் புதுவகையான கார்கள் இயங்கி கொண்டுள்ளது. அதிலும் இளைஞர்கள் படு வேகமாக கார்களை இயக்கி சாகசம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் கேரளாவை சேர்ந்த 74 வயதான மனியம்மா கார்களை அசால்டாக இயக்கி அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளார். வயது ஒரு எண் மட்டுமே என்று மீண்டும் நிரூபித்துக் காட்டியவர் கேரளாவை சேர்ந்த 74 வயதான மனியம்மா. “டிரைவர் அம்மா” என்று அன்பாக அழைக்கப்படும் இவர், துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை பாரம்பரிய சேலை அணிந்து இயக்கும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது.

துபாயை கலக்கும் மனியம்மா

மனியம்மா சிறு வயதிலிருந்து வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட அவர், கார், பஸ், லாரி, டிரக், ஹெவி வாகனங்கள் என 11 வகையான வாகனங்களை இயக்கும் வகையில் லைசன்ஸை பெற்றுள்ளார். பல்வேறு வாகனங்களை சட்டபூர்வமாக ஓட்டக் கூடிய திறன் பெற்றவர். இது அவரை ஒரு சாதாரண ஓட்டுனராக அல்லாமல், பலருக்கும் முன்மாதிரியாக உயர்த்தியுள்ளது. துபாய் போன்ற உலகளாவிய நகரத்தில், பெண்கள் சேலை அணிந்து கார் ஓட்டுவது அன்றாடம் காணக்கூடிய காட்சி அல்ல. ஆனால் மனியம்மா அதை இயல்பாக செய்து வருகிறார். அந்த சாலையில் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓட்டிச் சென்ற அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பல கோடி மக்களை கவர்ந்துள்ளது.

எந்த வயதிலும் சாதிக்கலாம்

சேலை அணிந்து ஸ்டீரிங்கை பிடித்திருக்கும் அவரது நம்பிக்கை, பெண்கள் எதையும் சாதிக்க முடியும் என்ற வலிமையான செய்தியை தருகிறது. மனியம்மா தனக்கு மட்டும் அல்லாமல், பிறருக்கும் வழிகாட்டியாக விளங்குகிறார். துபாயில் ஒரு டிரைவிங் ஸ்கூல் நடத்தி, பலருக்கு வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்து வருகிறார். ஓட்டுநர் திறனை மட்டுமல்லாமல், தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் மனவலிமையைப் பற்றியும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறார். 74 வயதிலும், தனது ஆர்வத்தை பின்தொடர்ந்து உலகுக்கு ஊக்கமாக நிற்கும் மனியம்மா, இன்று பெண்கள் மட்டுமல்ல, இளைஞர்கள் கூட கற்றுக்கொள்ள வேண்டிய மனிதர். “வயது வந்துவிட்டது, செய்ய முடியாது” என்று நின்று விடாமல், “எந்த வயதிலும் சாத்தியம்” என்று காட்டியுள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!
இந்தியாவின் எதிரி..! இனி ரஷ்யாவின் எதிரி.. இனி எவனும் வாலாட்ட முடியாது.. வேற லெவல்