மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா லண்டனில் மே 6ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மே 6ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவின் போது ராணி கமிலாவும் முடிசூட்டப்படுவார். இந்த விழா பிபிசியில் காலை 11 மணி முதல் (லண்டன் நேரம்) நேரடியாக ஒளிபரப்பப்படும். விழாவை தொடர்ந்து மூன்று நாட்கள் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறும். அவரது முடிசூட்டு விழாவின் முக்கியமான தருணங்க்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
ஊர்வலம்: கிங் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோர் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரை நவீன வைர விழா தங்க வண்டிகளில் பயணம் செய்வார்கள். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 60வது ஆண்டை நினைவுகூரும் வகையில் இந்த சிறப்பு 4 சக்கர வண்டி உருவாக்கப்பட்டுள்ளது.
நடந்து செல்லும் வேகத்தில் மட்டுமே பயணிக்கக்கூடிய 260 ஆண்டுகள் பழமையான கோல்ட் ஸ்டேட் கோச்சில் இந்த ஜோடி முடிசூட்டு ஊர்வலத்தில் அபேயில் இருந்து திரும்பும். 4 டன் எடை கொண்ட இந்த கோல்ட் ஸ்டேட் கோச் வண்டியை 8 குதிரைகள் இழுக்க வேண்டும். சுமார் 4,000 ஆயுதப்படை வீரர்கள் ஒரு மைல் நீள ஊர்வலத்தில்.
அபிஷேகம்: ஆலிவ் மலையிலிருந்து ஆலிவ்களால் தயாரிக்கப்பட்டு ஜெருசலேமில் வணங்கப்படும் புனித கிறிஸ்ம எண்ணெயைப் பயன்படுத்தி சார்லஸ் அபிஷேகம் செய்யப்படுவார்.
முடிசூட்டுதல்: முடிசூட்டுவதற்காக, சுமார் 700 ஆண்டுகள் பழமையான முடிசூட்டு நாற்காலியில் அமர்ந்திருப்பார். மூன்றாம் சார்லஸ் மன்னர் 2.2 கிலோ எடையுள்ள செயின்ட் எட்வர்ட் கிரீடத்தை அணிவார்.
பங்கேற்பாளர்களின் பட்டியல்: வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் இந்த நிகழ்விற்கு பல்வேறு தரப்பு மக்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பிடன், இந்திய துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், இந்திய வம்சாவளி சமையல் கலைஞர் மஞ்சு மாலி மற்றும் பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஆகியோர் அடங்குவர்.
முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளும் மன்னர் குடும்பத்தினர்: இளவரசர் ஹாரி இந்த விழாவில் கலந்துகொள்வார், இளவரசி யூஜெனி, இளவரசி பீட்ரைஸ், மூன்றாம் சார்லஸ் மன்னரின் மருமகள் ஜாரா டிண்டால், ஜாரா டின்டாலின் கணவர் மைக் டிண்டால் மற்றும் இளைய அரச குடும்பத்தாரும் விழாவில் கலந்துகொள்வார்கள்.
இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மார்க்லே முடிசூட்டு விழாவைத் தவிர்க்கிறார். அவர் தனது குழந்தைகளுடன் அமெரிக்காவில் தங்குவார் என்று கூறப்படுகிறது.