பாகிஸ்தானில் பயங்கர கலவரம்: நிலத் தகராறால் நடந்த சண்டையில் 36 பேர் பலி; 162 பேர் காயம்

By SG Balan  |  First Published Jul 28, 2024, 11:25 PM IST

சில பகுதிகளில் மோதல்கள் ஓய்துள்ளபோதும், மற்ற பகுதிகளில் துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எஞ்சிய பகுதிகளிலும் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


வடமேற்கு பாகிஸ்தானில் இரண்டு பழங்குடி சமூகத்தினர் இடையே ஞாயிற்றுக்கிழமை மூண்ட பயங்கர ஆயுத மோதல்களில் குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 162 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பழங்குடியினர், மதக் குழுக்களிற் மோதல் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடக்கும் வரலாறு கொண்ட அப்பர் குர்ரம் மாவட்டத்தின் போஷேரா கிராமத்தில் சென்ற 5 நாட்களாக மோதல்கள் நடந்துவருகின்றன. இந்தப் பகுதி ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இருக்கிறது.

Latest Videos

undefined

ஐந்து நாட்களாக நடந்த பழங்குடியின மோதல்களில் இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையை குர்ராமின் துணை ஆணையர் ஜாவெதுல்லா மெஹ்சுத் உறுதிப்படுத்தினார். போஷேரா, மாலிகேல் மற்றும் தண்டார் பகுதிகளில் வசிக்கும் ஷியா மற்றும் சன்னி பழங்குடியினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி சண்டை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பான் கார்டு இல்லாமலே ஆன்லைனில் புதிய வங்கிக் கணக்கு தொடங்க முடியுமா?

சில பகுதிகளில் மோதல்கள் ஓய்துள்ளபோதும், மற்ற பகுதிகளில் துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எஞ்சிய பகுதிகளிலும் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நான்கு நாட்களுக்கு முன்பு, இரு பழங்குடியினருக்கு இடையே நிலத் தகராறில் இந்த மோதல் உருவானதாகச் சொல்லப்படுகிறது. பீவார், டாங்கி, பாலிஷ்கேல், கார் கலே, மக்பால், குஞ்ச் அலிசாய், பரா சம்கானி மற்றும் கர்மான் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் கலவரம் வேகமாகப் பரவியது.

கலவரத்தில் இரு தரப்பினும் குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் போன்ற அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். குர்ரம் பழங்குடியினர் மாவட்டத்தின் பரசினார் மற்றும் சத்தா ஆகிய முக்கிய நகரங்களில் ராக்கெட் மற்றும் குண்டுகள் வீசப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

தொடரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வழக்கை சீர்குலைந்துள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய, பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா? மத்திய அமைச்சர் சொன்ன சேதி என்ன தெரியுமா?

click me!