கன்னியாஸ்திரி ஒருவரால் 12 வயதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் 14 வயதில் சிறுவன் ஒருவன் தந்தையாகியுள்ளான். இங்கிலாந்தின் கடற்கரையோர நகரமான லிதம் செயிண்ட் ஆனிஸ் பகுதியில் இருந்த ஜான் ரேனால்ட்ஸ் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் 12 வயதில் தம்மை ஒரு கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹேய்ஸ் என்பவர் கூறியுள்ளார். எனக்கு 10 வயது ஆனபோது, என்னை பெற்றோர் கைவிட்டுவிட்டனர். இதனால், நான் ஜான் ரேனால்ட்ஸ் இல்லத்தில் சேர்க்கப்பட்டேன். படிப்பில் மிகவும் கெட்டிக்காரனாக இருந்த நான், பாடல்களை பாடுவதிலும் சிறந்து விளங்கியதால், ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த எல்லோருக்கும் என்னை மிகவும் பிடித்திருந்தது.
நானும் அவருக்கு உதவி செய்தபோது, திடீரென கீழே குனிந்த அவர், எனது கால்சட்டையை கழற்றினார். அவர் என்ன செய்கிறார் என்பது எனக்கு புரியவில்லை. திடீரென அங்கு குவிந்திருந்த துணிகள் மீது என்னை தள்ளிய அவர், என் மீது பாய்ந்து, எனது உதடுகளில் முத்தமிட முயற்சித்தார். ஆனால், ஆணும் பெண்ணும் முத்தமிட்டால் குழந்தை பிறந்துவிடும் என நான் கருதிக் கொண்டிருந்ததால், அவரை முத்தமிட அனுமதிக்கவில்லை.
இதேபோல், கன்னியாஸ்திரி மேரி கான்லெத், 2 ஆண்டுகளாக என்னை தொடர்ந்து அவர் ஆசைக்கு இணங்க வைத்தார். எனக்கு 14 வயது ஆன போது, ஒரு நாள் தனிமையில் இருந்த போது உன்னால் நான் கர்ப்பமாகிவிட்டதாக அந்த கன்னியாஸ்திரி கூறினார். அவர் கர்ப்பமான தகவல் தேவாலய நிர்வாகத்துக்கு தெரிந்துவிட்டது. இதனால் அவரை கன்னியாஸ்திரி பணியில் இருந்து விடுவித்து, அவரது சொந்த நாடான அயர்லாந்துக்கே அனுப்பிவைத்துவிட்டனர்.
நாட்கள் உருண்டோடியது, எனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் பிறந்துவிட்ட நிலையிலும், கன்னியாஸ்திரி என்னை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், மிகவும் சங்கடத்தை கொடுத்துக் கொண்டே இருந்ததால், மனைவியுடன் சராசரி உறவை மேற்கொள்ள முடியாமல் தவித்ததால், விவகாரத்து ஆகிவிட்டதாக ஹேய்ஸ் கூறியுள்ளார்.