உடல் உறவின் போது காதலனை துண்டு துண்டாக வெட்டி கொன்ற காதலி...! உறைய வைக்கும் காரணம்...!

 |  First Published Jul 4, 2018, 11:32 PM IST
rusian girl killed her lover



ரஷ்யாவில், உள்ள பெண் ஒருவர் காதலரை உடலுறவின் போது துண்டு துண்டாக வெட்டி சாத்தானுக்கு பலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூட நம்பிக்கையை முதியவர்கள் மத்தியில் மட்டும் அல்ல இளம் வயதினர் மத்தியிலும் தலைவிரித்தாடுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைத்துள்ளது ரஷ்யாவில் அரங்கேறி உள்ள ஒரு கொடூர, நரபலி சம்பவம்.

Latest Videos

ரஷ்யாவை சேர்ந்த அனஸ்தேசியா ஒனிகினா என்ற பெண், முன்னாள் போலீஸ் அதிகாரி டிமிட்ரிச் சிங்கேவிச் என்கிற 24 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஒனிகினா தன்னுடைய வீட்டில், காதலருடன் தனிமையில் இருந்துள்ளார். காதலருடன் உறவில் இருந்த போதே, ஒனிகினா காதலரை கொலை செய்தார்.  பின் இவருடைய பிறப்புறுப்பை அறுத்தும், விரல்களை எலும்புகள் தெரிவது போல் சீவியும், கன்னத்தில் உள்ள சதைகளை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். 

பின் சில பாகங்களை வெட்டி தன்னுடைய பிரிட்ஜில் வைத்துள்ளார். சில பாகங்களை குப்பையில் வீசி எறிந்துள்ளார். 

ஆரம்பத்தில் இருந்தே, டிமிட்ரிச் காணாமல் போன வழக்கில் போலீசார் ஒனிகினா மீது, சந்தேகப்பட்டு விசாரணை செய்து வந்தனர். முதலில் மறுத்து வந்த இவர், பின் டிமிட்ரிச்சை கொலை செய்தது தான் தான் என ஒற்றுக்கொண்டார். 

அதிர வைக்கும் காரணம்:

காதலித்த காதலனையே இவ்வளவு கொடூரமாக கொலை செய்துள்ள காரணம் குறித்து இவர் கூறியது பலருக்கும் வினோதமாக இருந்தது.

போலீசாரின் விசாரணையில் ஒனிகினா கூறுகையில் தன்னுடைய காதலரின் முகம் சாத்தன் முகத்தோடு ஒற்று போனதால் அவரை,  அதே முறையில் கொன்றதாக கூறியள்ளார். அதனால் சாத்தான் விரல்களை போல் டிமிட்ரிச்  விரல்களையும் செதுக்கியதாகவும் கூறினார்.

இந்த கொலை சம்மந்தமாக இவரை கைது செய்து , உளவியல் ரீதியாக பரிசோதித்து வருகிறார்கள். மேலும் இந்த கொலைக்கு யாராவது உள்ளார்களா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

click me!