'ஓல்டு ஏஜ் ஹோமிற்கு' என்னை அனுப்புவியா? மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தாய்...

 |  First Published Jul 4, 2018, 5:09 PM IST
mother killed his son



அமெரிக்காவின் அரிசோனா மாகாணாத்தை சேர்ந்த மூதாட்டி அன்னா மே ப்ளஸிங் (92) என்பவர், அவரது மகன் முதியோர் இல்லத்தில் சேர்க்க முற்பட்டுள்ளார். ஆனால், அந்த மூதாட்டி முதியோர் இல்லம் செல்ல விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.

மகன் பிடிவாதமாக தனது தாயை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதில் விடாப்பிடியாக இருந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மகனை சுட்டுள்ளார். இதில் அவரது மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன் பிறகு அவரது மருமகளை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியுள்ளார். இது குறித்து தகவல்  அன்னா மே ப்ளஸிங்கை கைது செய்தனர். 

Latest Videos

தங்கள் குழந்தைகளை பெற்றோர், பெரும் பாடுபட்டு வளர்த்து வருகின்றனர். பெரியவர்களாவது வரை அவர்களது தேவையை பெற்றோர்கள் நிறைவேற்றி
வருகின்றனர். 

சமூகம் மதிக்கும் வண்ணம், கல்வி, திருமணம் என அனைத்தையும் பெற்றோர்கள் செய்து கொடுக்கின்றனர். ஆனால், வயதான பெற்றோரை, முதியோர் இல்லத்தில் விட்டுச்செல்லும அவலம் தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

மகனோ, மகளோ அவர்களது விருப்பத்தின்பேரில் முதியோர் இல்லத்துக்கு செல்லும் பெற்றோர்கள் மத்தியில் நான் வீட்டில்தான் இருப்பேன் என்று பிடிவாதமாக கூறியும் சிலர் இருந்து வருகின்றனர். ஆனால், முதியோர் இல்லத்துக்கு செல்ல மாட்டேன் என்று கூறி மகனை சுட்டுக் கொள்ளும் அளவுக்கு இந்த மூதாட்டி சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!