27 ஆம் தேதி ஏற்படும் சந்திர கிரகணம்...! இதில் என்ன சிறப்பு தெரியுமா...?

 |  First Published Jul 4, 2018, 1:13 PM IST
Lunar Eclipse is going to happen on copmin 27th



வரும் 27 ஆம் தேதி ஏற்பட உள்ள சந்திர கிரகணம் இந்த ஆண்டு ஏற்பட உள்ள மிக பெரிய கிரகணம் என்பது குறிப்பிடத்தக்கது

சூரியனுக்கு சந்திரனுக்கும் இடையே இடையே பூமி கடக்கும் போது ஏற்படக்கூடிய இந்த கிரகணம் சுமார் 1 அணி நேரம் 45 நிமிட அளவிற்கு நீடிக்கும்.

Latest Videos

இது இந்தியா முழுவதும் தெரியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 27-ந் தேதியன்று, திருப்பதி கோவில் 12 மணிநேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

28-ந் தேதி அதிகாலை 4.15 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுத்தி, புண்யாவசனம் செய்த பின் சுப்ரபாத சேவை நடைபெறும்.

வரும் 27-ந் தேதி இரவு 11.54 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.49 மணிவரை முழுசந்திர கிரகணம் நிகழ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினத்தில் நிலவை சுற்றி சிகப்பு நிற வளையம் தோன்றும் என்பதால் அதனை ரெட் மூன் என அழைக்கப்படுகிறது.

கிரகணம் ஏற்படும் நாளில் பவர்ணமி வருவதால் இந்த நாள் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது

இன்றைய தினத்தில் கிரகண நேரத்தில் அனைத்து கோவில் நடை சாத்தப்படும். கிரகணம் முடிந்த உடன், கோவிலில் சுத்தம் செய்த பின்னர் மீண்டும் நடை திறக்கப்படும்.

இதே போன்று வீட்டில் உள்ளவர்களும் அந்த நேரத்தில் பொதுவாகவே எந்த நல்ல செயலையும் செய்ய மாட்டார்கள்.

பின்னர் கிரகணம் முடிந்த பின்னர் சாதரணமாக வீடு முழுக்க சுத்தம் செய்த பின்னர், உணவை உட்கொள்வார்கள்...சாமிக்கு பூஜை செய்வார்கள்.

இந்த கிரகணம் தான் இந்த ஆண்டில் ஏற்பட  உள்ள மிக பெரிய கிரகணம் என்பது  குறிப்பிடத்தக்கது.

click me!