பூமியின் 24 மணிநேரம்! விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட டைம்லேப்ஸ் வீடியோ!!

By SG Balan  |  First Published Sep 4, 2024, 5:37 PM IST

36,000 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த பிரமிக்க வைக்கும் காட்சிகள், பூமியின் மேற்பரப்பில் சூரிய ஒளி மற்றும் இருள் எவ்வாறு பரவுகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஒளியும் நிழலின் நடனமிடுவது போன்ற மயக்கும் காட்சிகளும் வீடியோவில் உள்ளன.


ஹிமவாரி-8 (Himawari-8) என்ற ஜப்பானிய செயற்கைக்கோள் மூலம் படம் பிடிக்கப்பட்ட ஒரு டைம்-லேப்ஸ் வீடியோவில், பூமி ஒருநாள் சுழற்சி பிரமிக்க வைக்கும் வகையில் பதிவாகியுள்ளது.

36,000 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகள், பூமியின் மேற்பரப்பில் சூரிய ஒளி மற்றும் இருள் எவ்வாறு பரவுகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஒளியும் நிழலும் நடனமிடும் அழகிய காட்சியும் இதில் பதிவாகியுள்ளது.

Latest Videos

undefined

"ஹிமவாரி-8 செயற்கைக்கோள் மூலம் 36,000 கிலோமீட்டர் (22,000 மைல்கள்) தொலைவில் இருந்து பூமியில் ஒரு நாள் கடந்து செல்வதைப் பாருங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முழு ஸ்கிரீனில் பாருங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பீதியைக் கிளப்பும் நாசா! பூமியை நோக்கி சீறிப் பாய்ந்து வரும் 720 அடி சிறுகோள்!

A day passing on planet Earth seen from 36,000 kilometers (22,000 miles) by the satellite Himawari-8. (Watch full screen) pic.twitter.com/CU6GU9AuEM

— Wonder of Science (@wonderofscience)

இந்த டைம்லேப்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பெற்றுள்ளது. பார்வையாளர்கள் பூமியின் அழகைப் வியந்து பார்த்து தங்கள் உணர்ச்சிகளை வெளியிட்டுள்ளனர்.

ஹிமவாரி-8 செயற்கைக்கோளின் இந்த டைம்-லேப்ஸ் காட்சிகள் @wonderofscience என்ற எக்ஸ் கணக்கில் இருந்து பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ, சூரிய ஒளி பூமியை கடந்து செல்லும்போது ஒரு பக்கத்தை ஒளிரச் செய்வதையும், அப்போது மறுபக்கம் இருளில் மூழ்குவதையும் பார்க்கலாம்.

விண்வெளியின் மர்மங்கள் குறித்த மனிதர்களின் தேடல் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. பூமி தூரத்திலிருந்து எப்படித் தோன்றுகிறது என்பதைப் பற்றி சிந்திப்பது, பூமியின் இயக்கவியல் பற்றிய புரிதலுக்கு உதவக்கூடியது. விண்வெளி அறிவியலில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் இது தொடர்பான ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் பூமியைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்தக் குறிப்பிட்ட வீடியோ செயற்கைக்கோளின் மேம்பட்ட கண்காணிப்பு திறனையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த வீடியோ உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை வியக்க வைக்கும் அதே வேளையில், இயற்கையைப் பேணுவதற்கான நினைவூட்டலாகவும் உள்ளது.

Death Penalty for Rape: பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் நாடுகள்!

click me!