Watch | பூமியின் சுழற்சி வேகம்: பிரமிக்க வைக்கும் டைம்லேப்ஸ் வீடியோ!

By Dinesh TG  |  First Published Sep 3, 2024, 9:39 PM IST

ஹிமாவரி-8 செயற்கைக்கோள் பதிவு செய்துள்ள பூமியின் ஒரு நாள் சுழற்சியின் டைம்லேப்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
 


மனிதர்கள் எப்போதும் விண்வெளியின் மர்மங்களை அறிய ஆர்வமாக இருக்கிறான். வானில் ஏதாவது யூஎஃப்ஒ (UFO) தெரிந்தால் ஏலியன் இருப்பது பற்றிய விவாதம் தொடங்குகிறது. விண்வெளியில் இருந்து பூமி எப்படி இருக்கும், அதன் இயக்கம் எப்படி இருக்கும் என்பதில் மக்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது.

விண்வெளி அறிவியலில் பல புதிய கண்டுபிடிப்புகள் நடந்துள்ளன. தற்போது விண்வெளி நிலையத்தில் எப்போதும் விஞ்ஞானிகள் இருந்து பூமியை கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஹிமவரி-8 செயற்கைக்கோளின் (Himawari 8 satellite) சமீபத்திய டைம்லேப்ஸ் வீடியோவில் பூமியின் பிரமிக்க வைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதில் பூமியின் ஒரு நாள் சுழற்சி சில நொடிகளில் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ மிகவும் கவர்ச்சிகரமானதாக இருப்பதால், குறுகிய நேரத்தில் வைரலாகிவிட்டது.

A day passing on planet Earth seen from 36,000 kilometers (22,000 miles) by the satellite Himawari-8. (Watch full screen) pic.twitter.com/CU6GU9AuEM

— Wonder of Science (@wonderofscience)

 

Tap to resize

Latest Videos

undefined

சூரிய ஒளி மற்றும் பூமியில் இருள்

ஹிமவரி-8 செயற்கைக்கோளின் சமீபத்திய டைம்லேப்ஸ் வீடியோ, பூமியின் ஒரு பிரமிக்க வைக்கும் காட்சியை காட்டுகிறது. இதில் பூமியின் ஒரு நாள் சுழற்சி சில நொடிகளில் காட்டப்பட்டுள்ளது. @wonderofscience கணக்கு மூலம் சமூக ஊடக தளத்தில் இந்த மிகவும் கவர்ச்சிகரமான வீடியோ பகிரப்பட்டுள்ளது. சூரிய ஒளி முழு கிரகத்திலும் எவ்வாறு சுழன்று, ஒரு பக்கத்தை பிரகாசமாக்குகிறது, மறுபுறம் இருட்டை உருவாக்குகிறது என்பதை இது காட்டுகிறது.

36,000 கிமீ உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ

36,000 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோ ஆன்லைனில் வைரலாகி, இதுவரை லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இது ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்துள்ளது. பூமி இவ்வளவு தெளிவாகச் சுற்றுவதைப் பார்வையாளர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். டைம்லேப்ஸ் பூமியின் இயற்கை அழகை வெளிப்படுத்தி, மிகவும் கவர்ச்சிகரமான காட்சியை உருவாக்குகிறது.

இதையும் படியுங்கள்-

பீதியைக் கிளப்பும் நாசா! பூமியை நோக்கி சீறிப் பாய்ந்து வரும் 720 அடி சிறுகோள்!

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள்; இந்தியா பட்டியலில் இருக்கிறதா?

click me!