ரஷ்யாவில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு லாபத்தை ஈட்டிய நிதி நிறுவனம் ஒன்று திடீரென எந்த ஒரு தடயமும் இல்லாமல் மாயமாக மறைந்திருக்கிறது.
ரஷ்யாவில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு லாபத்தை ஈட்டிய நிதி நிறுவனம் ஒன்று திடீரென எந்த ஒரு தடயமும் இல்லாமல் மாயமாக மறைந்திருக்கிறது.
ரஷ்ய மொழி ஊடகமான RTVI அந்நாட்டில் இருந்த பேங்க்நோட்டா எல்எல்சி என்ற நிறுவனம் பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ரஷ்ய அரசு ஆதாரங்களில் இருந்து எடுத்த ஆவணங்கள் அடிப்படையில், இந்த நிறுவனம் எந்த தடயமும் இல்லாமல் மாயமாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
undefined
"ரஷ்யாவில் நீங்கள் கேள்விப்படாத மிகவும் லாபகரமான நிறுவனம்" என்ற தலைப்பில் RTVI இந்தப் புலனாய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது. சென்ற ஜூன் மாதத்தில், ரஷ்ய நிறுவனங்கள் தங்கள் முந்தைய ஆண்டு வருவாய் விவரங்களை வெளிப்படுத்திய ஒரு மாதத்தில் பேங்க்நோட்டா நிறுவனம் மாயமானது பற்றி கண்டுபிடித்ததாக RTVI கூறுகிறது.
அள்ள அள்ளப் பணம்... 5 வருட பிக்ஸட் டெபாசிட்டில் தாராளமான வட்டி கொடுக்கும் வங்கிகள்!
பேங்க்நோட்டா மறைவதற்கு முன்பு கடந்த ஆண்டு 37.1 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியதாக RTVI தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டில் 3.7 டிரில்லியன் ரூபிள் (தோராயமாக 40.4 பில்லியன் டாலர்) வருவாய் மற்றும் 34 டிரில்லியன் ரூபிள் (தோராயமாக 37.1 பில்லியன் டாலர்) நிகர லாபம் ஈட்டியதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது ரஷ்ய அரசுக்குச் சொந்தமான முன்னணி எரிசக்தி நிறுவனங்களான ரோஸ்நேப்ட் மற்றும் காஸ்ப்ரோம் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களையும் விட அதிகமாகும்.
பேங்க்நோட்டாவுக்கு பிரத்யேகமாக ஓர் இணையதளத்தையும் வைத்திருந்தது. ஆனால், இப்போது அந்த இணையதளத்தையும் பார்க்க முடியவில்லை. ஆனால், வேபேக் மெஷினில் (Wayback Machine) அந்த இணையதளப் பக்கம் சேமிக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் வணிகக் கடன் வழங்கும் நிறுவனமாக பேங்க்நோட்டோ இயங்கிவந்ததாக இணையதளம் மூலம் தெரிகிறது. ஆனால், பேங்க்நோட்டாவிற்கு வங்கி உரிமம் இல்லை என்பதை RTVI சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்ய சட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பதிவேட்டில், மாஸ்கோவைச் சேர்ந்த டிமிட்ரி ஃப்ரோலோவ் என்பவர்தான் பேங்க்நோட்டா நிறுவனத்தின் ஒரே உரிமையாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மீது சிறிய திருட்டுக் குற்றங்கள் உள்ளதாகவும் ரஷ்ய பெடரல் வரி அமைப்பு கூறுகிறது.
RTVI தகவலின்படி, பேங்க்நோட்டா ஜூன் 2023 இல் நான்கு பிற நிறுவனங்களுடன் சேர்ந்து தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு வணிக வளாகம் ஒன்றிலும், குடியிருப்பு ஒன்றிலும் இடங்கள் இருந்துள்ளன. இந்த முகவரிகளில் அலுவலகங்கள் எதுவும் இல்லை. மேலும் தற்போது அங்கு இருப்பவர்கள் ஃப்ரோலோவ் அல்லது அவரது நிறுவனங்களைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்கிறார்கள்.
இந்த நிறுவனம் பற்றி பல்வேறு வல்லுநர்களிடமும் RTVI கருத்து கேட்டிருக்கிறது. வீடு, வாகனக் கடன்களில் இருந்து இந்த அளவுக்கு லாபத்தை உருவாக்க முடியாது என்று பல நிதித்துறை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். வங்கிகள் மற்றும் கடன் வாங்குபவர்களுக்கு இடையில் செயல்படும் இடைத்தரகர்களுக்கு உரிமம் தேவையில்லை என்பதால் பேங்க்நோட்டா அதுபோன்ற தரகு நிறுவனமாக இயங்கியிருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், பேங்க்நோட்டா ஈட்டியதாகக் கூறப்படும் தொகை பற்றியும் அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். அதனை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகின்றனர்.
இந்த நிறுவனம் காணாமல் போவதற்கு முன்பு மொத்த நிதியையும் வெளிநாடுகளுக்கு மாற்றியிருக்கலாம் என்றும் சில நிபுணர்கள் கணிக்கின்றனர். பெலாரஸில் உள்ள ஒரு கிளையைப் பற்றி கடந்த டிசம்பரில் ரஷ்ய வரி அதிகாரிகளுக்குத் பேங்க்நோட்டா நிறுவனமே தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், பெலாரஸ் வணிகப் பதிவேட்டில் அப்படி ஒரு கிளை இருந்ததாக எந்தப் பதிவும் இல்லை.
மொபைல் ஸ்லோவா இருக்கா? இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க... புது ஃபோன் மாதிரி மாத்தலாம்!