239 விஞ்ஞானிகள் உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளனர். அதில் சுமார் 32 நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்குவர், அவர்கள் எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் காற்றில் உள்ள சிறிய துகள்கள் மூலம் ஓரிடத்திலிருந்து
கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில் உலகெங்கிலும் இருந்து சுமார் 239 விஞ்ஞானிகள் உலகச் சுகாதார அமைப்புக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளனர். அதில் கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது என்றும், எனவே தற்போது உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உடனே மாற்ற வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,15,55,414 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,36,720 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 65,34,456 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக அளவில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் அதைக் கொஞ்சமும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் இந்த வைரஸ் தொடர்பாக உலக அளவில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வைரஸ் எப்படி பரவுகிறது அதன் தன்மை என்ன? கட்டுபடுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் என்ன என்பது குறித்தெல்லாம் ஆராயப்பட்டுவருகிறது. இந்நிலையில் உலக அளவில் இருந்து சுமார் 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளனர். அதில் சுமார் 32 நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்குவர், அவர்கள் எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் காற்றில் உள்ள சிறிய துகள்கள் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தப்படுகிறது. இதனாலேயே மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் நீண்ட நேரம் காற்றில் இருக்கக்கூடும், அது பல மீட்டர் தூரம் பயணித்து அருகில் உள்ள மக்களை பாதிக்கிறது. குறிப்பாக மூடிய அறைகள், அல்லது மக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடங்களில் தொற்று மிக வேகமாகப் பரவுகிறது. பள்ளிக்கூடங்கள், கடைகள் மற்றும் இன்னும் பிற இடங்களில் வேலை செய்யும் மக்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குறிப்பாக பேருந்துகளில் பயணம் செய்வது ஆபத்தானது, ஏனென்றால் சுமார் 2 மீட்டர் தூர இடைவெளியில் அமர்ந்து பயணிப்பவர்களும் கொரோனா வைரஸால் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது, எனவே உலக சுகாதார நிறுவனம் தற்போது அறிவித்துள்ள நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உடனே மாற்ற வேண்டும், காற்றின் மூலம் வைரஸ் பரவுகிறது என்பதை அறிவிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். கடிதம் எழுதிய விஞ்ஞானிகள் குழுவில் அங்கம் வகிக்கும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லிடியா மொராவ்ஸ்கா, வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதை நாங்கள் 100 சதவீத நம்புகிறோம் எனக் கூறியுள்ளார். நல்ல காற்றோட்டமில்லாத இடங்களில் இடைவெளி விட்டு தொலைவில் அமர்ந்திருந்தாலும் மக்கள் முகமூடி அணிய வேண்டியதை தவிர்க்ககூடாது. பாதிக்கப்பட்ட நபரின் இருமல் அல்லது தும்மலின்போது கொரோனா வைரஸ் முக்கியமாக பெரிய நீர் திவலைகள் மூலம் பரவுகிறது என WHO கூறிவரும் நிலையில், விஞ்ஞானிகளின் புதிய கூற்றை கருத்தில்கொண்டு அதன் வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றி அறிவிக்க வேண்டும் என வர் தெரிவித்துள்ளார்.