112 வயதில் 8வது கல்யாணத்துக்குக் காத்திருக்கும் மலேசிய மூதாட்டி!

By SG Balan  |  First Published Jan 14, 2024, 8:40 PM IST

இதுபற்றிச் சொல்லும் அந்த மூதாட்டி, "என் முன்னாள் கணவர்கள் சிலர் உயிரிழந்துவிட்டனர். மற்றவர்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றோம். இப்போது நான் தனிமையில் வாடுகிறேன். எனக்குத் திருமணம் செய்துகொள்ள மணமகன் தேவை." என்கிறார்.


112 வயதான மூதாட்டி சிதி ஹவா தனது எட்டாவது திருமணத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் மாப்பிள்ளை கிடைப்பதற்காகக் காத்திருக்கிறார்.

30 கொள்ளு பேரக் குழந்தைகளுடன் 112 வயதான பாட்டி சிதி ஹவா ஹுசின். இந்த மூதாட்டி தான் மறுமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தனக்கு மணமகன் தேவை என்றும் கூறுகிறார்.

Tap to resize

Latest Videos

இதுவரை இவர் ஏழு முறை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அதன் மூலம் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். இருந்தாலும் இப்போது எட்டாவதுவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து தனக்கான வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

பச்சிளம் குழந்தைக்கு ஸ்க்ரூ, பேட்டரி, நெயில் பாலிஷ் ஊட்டி சாகடித்த கொடூர பெண்!

இதுபற்றிச் சொல்லும் அந்த மூதாட்டி, "என் முன்னாள் கணவர்கள் சிலர் உயிரிழந்துவிட்டனர். மற்றவர்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றோம். இப்போது நான் தனிமையில் வாடுகிறேன். எனக்குத் திருமணம் செய்துகொள்ள மணமகன் தேவை." என்கிறார்.

இந்த வயதிலும் திருமணத்துக்குத் தயாராக இருக்கும் மூதாட்டி சிதி ஹவா, தன் சொந்த வேலைகளைத் தானே செய்துகொள்கிறார். ஆச்சரியம் அளிக்கும் வகையில் தினமும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.

இப்போது 19 பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். மலேசியாவில் 58 வயதான இளைய மகன் அலி செமேயுனடன் வசித்து வருகிறார். வயது முதிர்வால் தனக்கு ஏற்பட்டிருக்கும் ஞாபக மறதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று சொல்கிறார்.

சாமானிய பார்வையில் மலேசிய வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் இந்த வயசான பாட்டி உதவுவார். தன்னுடைய டைரி குறிப்புகளைப் புரட்டிப் பார்த்து அன்று நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து பேசுவார்.

இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் அந்த மாதிரி போஸ்டு எல்லாம் இனிமே வராது!

click me!