தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி; சீனாவின் அடாவடிக்கு செம அடி!

By SG BalanFirst Published Jan 13, 2024, 9:14 PM IST
Highlights

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக கவனிக்கப்பட்ட இந்தத் தேர்தல், தைவானை தன் பிடிக்கும் கொண்டுவர முயற்சி செய்யும் சீனாவுக்கு பின்னடவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

தைவானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஆளும் கட்சியே மீண்டும் அங்கு ஆட்சி அமைக்க இருப்பது சீனாவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

2.3 கோடி மக்கள்தொகை கொண்ட தைவானில் தைவானில் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. சுமார் 1.95 கோடி பேர் வாக்களித்த இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி அடைந்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த லாய் சிங் டே புதிய அதிபராகப் பதவியேற்க இருக்கிறார்.

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக கவனிக்கப்பட்ட இந்தத் தேர்தல், தைவானை தன் பிடிக்கும் கொண்டுவர முயற்சி செய்யும் சீனாவுக்கு பின்னடவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தடம் பதிக்கும்: எலான் மஸ்க் உறுதி

சீனாவுக்குப் ஏன் பின்னடைவு?

தைவான் நாட்டில் 1996ஆம் ஆண்டில் முதல் அதிபர் தேர்தல் நடந்தது. சீனாவின் தொடர் சீண்டல்களுக்கு மத்தியில் தைவான் தனி நாடாக சுதந்திரமாக செயல்பட போராடி வருகிறது. தைவான் நாடே சீனாவின் ஒரு பகுதி தான் என்று சீனா கூறிவருகிறது. இதற்கு எதிராக போராடி தைவானை சுதந்திர நாடாக செயல்பட வைக்க ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சி முயன்று வருகிறது.

கடந்த 1949ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. இருப்பினும் தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறுகிறது. தைவானை மிரட்ட அடிக்கடி ராணுவத்தையும் பயன்படுத்துகிறது.

தைவானின் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்களை உலவ விடுவது, தைவான் கடலோரப் பகுதிகளில் சீனக் கப்பல்களை நிறுத்தவது என அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால், தைவானைக் கைப்பற்ற போர் தொடுக்கவும் சீனா ஆயத்தமாகி வருகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால், பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் சீனா போரில் இறங்காது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடுமையான மும்முனை போட்டி நிலவிய நிலையில், சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருக்கும் தேசியவாத கட்சி ஆட்சியைப் பிடித்தால், தைவான் மீது சீனாவின் ஆதிக்கம் வலுவடையக்கூடும் என்று  அஞ்சப்பட்ட நிலையில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

லாய் சிங் டே அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு கொண்டவராகப் பார்க்கப்படுகிறார். அறுவை சிகிச்சை நிபுணரான லாய் சிங் டே, தனது மருத்துவப் பணியை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவர். இவர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், தொடர்ந்து சீனாவின் அனைத்து அத்துமீறல் முயற்சிகளையும் முறியடிக்கப் பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு

click me!