நாட்டிற்கு ஆபத்து...!! இந்திய எல்லையில் 1000 பயங்கரவாதிகள்.!! கண்கொத்தி பாம்பாக ராணுவம்...!!

By Ezhilarasan Babu  |  First Published Oct 9, 2019, 8:16 AM IST

இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த எத்தனித்துள்ள அவர்கள்.  ஜம்மு காஷ்மீர் பகுதியில் 200 முதல் 300 தீவிரவாதிகள் என கூட்டாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  


இந்தி எல்லையில் வரவுள்ள கடுமையான மழை, குளிர் உள்ளிட்ட மோசமான சீதோஷண நிலையைப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் ஊடுருவ சுமார் 1,000 பயங்கரவாதிகள் வெடி மருத்துகளுடன் தயாராக காத்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,  பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவி பால் கோட்டில் இந்திய விமானம் குண்டு வீசியது  போன்ற  காரணங்களுக்காக, இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொக்கரித்து வருகின்றனர். இந் நிலையில்  இந்திய ராணுவ வீரர்கள் எல்லையை கண்கொத்தி பாம்பாக இருந்து கவனித்து வருவதுடன். ஊடுருவ முயற்சிக்கும் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று வருகின்றனர்.  இந்நிலையில்  இந்தியாவில் நாசகர வேலைகள் செய்ய இந்தியா- பாகிஸ்தான் எல்லையான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏராளமான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி கொடுத்து வந்த நிலையில் அர்கள் தாக்குதலுக்கு  தயாராகி உள்ளதாக தெரிகிறது.

Latest Videos

  

எல்லையில் வரவுள்ள, பனிப்பொழிவு மற்றும் மழை போன்றவற்றைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் ஊடுருவ சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடனும் வெடிமருந்துகளுடனும்,  காத்திருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு முகாமுக்குத் தலா 50  பயங்கரவாதிகள் வீதம் , சுமார் இருபது முகாம்கள்  அமைத்து அவர்கள் அன்றாடும் எல்லையை நோட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த எத்தனித்துள்ள அவர்கள்.  ஜம்மு காஷ்மீர் பகுதியில் 200 முதல் 300 தீவிரவாதிகள் என கூட்டாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  இதனால் ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர், உச்சகட்ட உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

click me!