எலான் மஸ்க்தான் அமெரிக்காவின் நிஜ அதிபர் என்றும், இவர் பேச்சை கேட்டு ஆடும் பொம்மைதான் டிரம்ப் என்றும் பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும்போது, டிரம்பின் பேச்சை மதிக்காமல் மஸ்க் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுவது சலசலப்பை கிளப்பியுள்ளது. மட்டுமல்லாது மஸ்க்கின் அறிவிப்பால் உக்ரைன்-ரஷ்யா போர் மெலும் தொடரும் என்றும் சொல்லப்படுகிறது.