மூன்றாம் உலகப் போர் குறித்து டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். 'மூன்றாம் உலகப் போர் வெகு தொலைவில் இல்லை' என்று அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், தனது தலைமையில் அப்படி எதுவும் நடக்க விட மாட்டேன் என்றும் அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். போர்ச் சூழல் ஏற்பட்டால், அதில் அமெரிக்கா பங்கேற்காது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் மியாமியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மூன்றாம் உலகப் போரால் யாருக்கும் லாபம் இல்லை என்றார்.