அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்க அரசின் தேவையற்ற செலவினங்கள் குறைக்கப்பட்டு வருகிறது. டிரம்ப் பதவியேற்ற பிறகு 'அரசு செயல் திறன்' (டிஓடிஜி )என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அதன் தலைவராக தொழில் அதிபர் எலன் மஸ்க் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இந்தியாவுக்கு தேர்தல் நிதியாக 21 மில்லியன் டாலர் ஏன் வழங்க வேண்டும்? டிரம்ப் கூறியிருந்த நிலையில், அவர் கூறியது தவறான தகவல் என்பது இப்போது தெரியவந்துள்ளது.