ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இருநாடுகளும் உக்கிரமாக தாக்கி வருகின்றன. இந்நிலையில் தான் உக்ரைன் கைப்பற்றிய குர்ஸ்க் மாகாணத்தை மீட்க ரஷ்ய படை வீரர்கள் 15 கிமீ தொலைவுக்கு கியாஸ் பைப்லைன் வழியாக தவழ்ந்துபோய் மேற்கொண்ட சீக்ரெட் ஆபரேஷன் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி மொத்த உலகத்தையும் அதிர வைத்துள்ளது.