சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று 3வது முறையாக 50 சதவீத வரியை அதிரடியாக விதித்துள்ளார். இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் பொருட்களுக்கு சீனா விதித்த 34 சதவீத கூடுதல் வரியை 84 சதவீதமாக அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளும் போட்டி போட்டு வரியை விதிப்பதால் இருநாடுகள் இடையே வர்த்தக போர் என்பது தீவிரமாகி உள்ளதோடு, பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை இருநாடுகளையும் சிக்கலில் சிக்க வைக்க உள்ளது.