கனடாவைச் சேர்ந்த 2,00,000க்கும் மேற்பட்ட மக்கள் எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமையை ரத்து செய்யக் கோரும் நாடாளுமன்ற மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியா எழுத்தாளர் குவாலியா ரீட் கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் எலான் மஸ்க்குக்கு எதிரான மனுவைத் தொடங்கினார். எலான் மஸ்குக்கு எதிரான இந்த மனுவை கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் ஒப்படைப்பார்கள். இதனைத் தொடர்ந்து எலான் மஸ்கின் கனடா குடியுரிமையை ரத்து செய்வது குறித்து கனடா அரசாங்கம் முடிவெடுக்கும்.