பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா என்பவர், தன்னுடைய 12 வயதில் கண்களில் மின்னல் தாக்கி பார்வையை பறிகொடுத்தவர்.. அப்போதிலிருந்து, பாபா வங்காவிற்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய காட்சிகள் மனதில் வருவதாக கூறி, அவைகளை கணிப்புகளாக எழுதி வைத்துள்ளார்... இவர் இறந்தபோதிலும், உலகைப் பற்றி கணித்து எழுதி வைத்திருந்ததெல்லாம் அப்படியே நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இவரது பெரும்பாலான கணிப்புகளும் கிட்டத்தட்ட அப்படியே நடந்துள்ளன.. அந்தவகையில், தற்போது பாபா வங்கா கணிப்பு இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.