சீனாவில் ஷான்ஸி மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் தங்க நகைக் கடைகளில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் அடித்து செல்லப்பட்டன. மொத்தமாக 20 கோடி தங்க நகைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், கடை உரிமையாளர் ஊழியர்களை வைத்து தேட சொல்லியுள்ளார். இதற்கிடையே இந்த தகவல் ஊர் மக்களும் தெரிந்து அவர்களும் தேட ஆரம்பித்துள்ளனர். காணாமல் போன நகைகளை மக்கள் சேற்றில் தேடும் படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.