சிறுத்தை ஒன்றை ராட்சத பல்லி ஒன்று அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்கள் இல்லாமல் வாழ முடியாத என்ற சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.. வேலை இல்லாத நேரத்தில் பலரும் சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களை பார்ப்பதை பழக்கமாக கொண்டுள்ளனர்.. எனவே சமூக ஊடக உலகத்தில் நாம் கற்பனை கூட செய்ய முடியாத பல விஷயங்களை பார்க்கிறோம்.. அந்த வகையில் விலங்குகளின் வீடியோக்கள், குழந்தைகளின் குறும்புத்தனமான வீடியோக்கள் என பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.. அப்படி நாம் காணும் வீடியோக்கள் நம்மை சில நேரங்களில் சிரிக்க வைக்கின்றன, சில நேரங்களில் சிந்திக்க வைக்கின்றன.. இன்னும் ஒரு சில வீடியோக்கள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன.. சில வீடியோக்களை அதிர்ச்சியடைய வைக்கின்றன, சில வீடியோக்கள் சோகத்தை ஏற்படுத்துகின்றன..
இதையும் படிங்க : பிஎஃப் பேலன்ஸை ஈசியா செக் பண்ணலாம்.. எப்படி தெரியுமா..?
அந்த வகையில் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், காட்டின் பயங்கரமான விலங்குகளில் ஒன்றான சிறுத்தையை, சிறிய விலங்கு ஒன்று அறைவதை பார்க்க முடிகிறது. The Figen என்ற ட்விட்டர் பயனர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
What a slap! 🤣 pic.twitter.com/EcJKGcNDsZ
— The Figen (@TheFigen_)அந்த வீடியோவில் காட்டின் நடுவே ராட்சத பல்லியை வேட்டையாடும் நோக்கில் சிறுத்தை ஒன்று அதன் அருகே செல்கிறது. ஆனால் அந்த பல்லி தனது வாலை சுழற்றி பளாரென சிறுத்தை அடிக்கிறது. இதனால் ஒரு நிமிடம் அந்த சிறுத்தை திகைப்பதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சிடைந்ததாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதுவரை இந்த வீடியோவை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ 9,000-க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.
இதையும் படிங்க : பொதுச்செயலாளரான கையோடு அமித்ஷாவை சந்திக்கும் இபிஎஸ்.. இதுதான் காரணமா? வெளியான பரபரப்பு தகவல்கள்..!