Velmurugan s | Published: Apr 7, 2025, 5:00 PM IST
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; "டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச அனுமதி கேட்டோம். டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று அரசு சொல்வது ஏன்? டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்தபோது, நாங்கள் வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டுமென்று கேட்டோமா? கச்சத்தீவு யார் ஆட்சியில் தாரைவார்க்கப்பட்டது. கச்சத்தீவு திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்டது. அதை முதல்-அமைச்சர் மறைக்கப் பார்க்கிறார். நீட் தேர்வை கொண்டு வந்ததும் திமுக-காங். ஆட்சிதான்." இவ்வாறு அவர் பேசினார்.