விருதுநகர்.. முன்னறிவிப்பு இல்லாமல் நடைபெற்ற தார் சாலை அமைக்கும் பணி - போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி!

விருதுநகர்.. முன்னறிவிப்பு இல்லாமல் நடைபெற்ற தார் சாலை அமைக்கும் பணி - போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி!

Ansgar R |  
Published : Mar 19, 2024, 11:35 PM IST

Viruthunagar : விருதுநகரில் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட நகரின் முக்கிய பிரதான சாலையான பழைய பேருந்து நிலையம் புள்ளளக்கோட்டை சாலையில், நெடுஞ்சாலை துறையினர் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பொதுவாக புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி இரவு நேரங்களில் நடைபெறும் நிலையில், எந்தவித முன்னறிவுப்பும் இல்லாமல், அறிவிப்பு பதாகைகள் எதுவும் வைக்கப்படாமல் மாலை வேளையில் தார் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசில் ஏற்பட்டது. இந்நிலையில் மீனாம்பிகை பங்களா பகுதியில், சிவகாசியில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்து செல்வதற்கு வழியில்லாமல் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தும் நிர்பந்தம் ஏற்பட்டது.

இதனால் சாலை பணியாளர்களுக்கும், பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாலை வேளையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமலும் முறையான வழிகாட்டுதல் இல்லாமலும் சாலையை அமைத்ததால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

03:53இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜீவானந்தம் நினைவுநாளை ஒட்டி மலர் தூவி மரியாதை
03:11காளிங்கராயன் கால்வாயை வெட்டிய காளிங்கராயரின் சிலையை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
03:412026 அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி..!
03:12காணும் பொங்கல் திருநாளில் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிப்பு – குடும்பத்துடன் மகிழ்ச்சி !
02:141952ல் வெளி வந்த பராசக்தி பார்த்துவிட்டேன் கமல்ஹாசன் கருத்தை அன்போடு வழிமொழிகிறேன் - வைரமுத்து
02:54த.வெ.க சார்பில் தை திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி சிறபித்தனர்
02:15தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்
03:29வரும் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:19தஞ்சையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்ற சுற்றலாப் பொங்கல் திருவிழா ! வைரல் வீடியோ
05:02சென்னை சங்கமம் கிராமிய கலை நிகழ்வுகளுடன் தொடக்கம் ! திமுக எம்.பி.கனிமொழி பேட்டி