
செங்கோட்டையன் டெல்லிக்குச் சென்று வந்த பிறகு என்னை அழைத்தது அமித்ஷா என்று கூறி இருக்கிறார் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த ஒருவர் அதிமுகவில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றால் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சிகளாக இருக்கக்கூடிய சூழலில் இது எந்த அடிப்படையில் நிகழ்ந்தது என்ற கேள்வி எழுவதாக தெரிவித்தார். பாஜகவினரால் செங்கோட்டையனுக்கும் பழனிச்சாமிக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லையா? அனைத்து பிரச்சினைகளிலும் தலையிடக்கூடிய பாஜக இந்த பிரச்சனையில் ஏன் வெளிப்படையாக தலையிடவில்லை?