
சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார் செங்கோட்டையன். அதிமுகவில் மிக முக்கிய தலைவராக இருந்தவர் எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் செயல்பட்ட நிலையில், அவரை கட்சியில் இருந்தே எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதற்கிடையே இன்றைய தினம் அவர் எதிர்பாராத வகையில் தனது கோபி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.