Madurai | மதுரையில் ரவுடி மீது போலீஸ் என்கவுண்ட்டர்! போலீஸ் கமிஷனர் லோகநாதன் விளக்கம்!

Velmurugan s  | Published: Apr 1, 2025, 1:01 PM IST

மதுரை அருகே போலீஸ் நடத்திய என்கவுண்ட்டரில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரவுடியை என்கவுண்ட்டர் செய்தது குறித்து மதுரை மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் கூறுகையில், ''மதுரையில் ரவுடி கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் கொலை வழக்கில் சுபாஷ் சந்திரபோஸ்க்கும் தொடர்பு உள்ளது. இதனைத் தொடர்ந்து தான் இவர் சென்ற காரை போலீஸ் வழிமறித்தபோது, அவர் அரிவாளால் 2 காவலர்களை வெட்டியுள்ளார். இதனால் அவர்கள் தற்காப்புக்காக சுபாஷ் சந்திரபோஸ் காலின் தான் சுட்டனர். ஆனால் அவர் குனிந்து விட்டதால் மார்பில் குண்டு பாய்ந்து உயிரிழந்து விட்டார்'' என்று தெரிவித்துள்ளார்.