தண்ணீர் திறக்க வில்லை என்றால் குடும்பத்தோடு சமையல் செய்து உண்ணும் போராட்டம்..! விவசாயிகள் அறிவிப்பு..

தண்ணீர் திறக்க வில்லை என்றால் குடும்பத்தோடு சமையல் செய்து உண்ணும் போராட்டம்..! விவசாயிகள் அறிவிப்பு..

Published : Aug 13, 2019, 03:25 PM IST

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி அமராவதி ஆற்றுப்பாசன விவசாயிகள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்.

கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சனை மற்றும் விவசாய பயன் பாட்டிற்காக உடனடியாக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமராவதி ஆற்றுப்பாசன விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பின்னர் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ் அவர்களிடம் உடனடியாக அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை மனுவும் அளித்தனர்.
அதன்பின்னர் செய்தியாளரிடம் பேசிய விவசாயிகள் அமராவதி ஆற்றில் சுமார் 60,000 விவசாய குடும்பங்கள் தண்ணீர் திறந்து விடுவதால் பயன்பெறுவார்கள்.
மேலும் குடிநீர் தேவையும் பூர்த்தி அடையும் அணையில் நீர் இருப்பு இருந்தும் கடைமடை வரை குடிநீர் வந்ததை அரசு உறுதி செய்ய வேண்டும்.
எனவே நாளை தண்ணீர் திறக்காவிட்டால் நாளை மறுதினம் சுதந்திர தினத்தில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குடும்பத்தோடு சமையல் செய்து உண்ணும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் திடீர் என 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு மனு அளிக்க வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

06:37கந்தன் மலை படத்தில், H.ராஜா-க்கு தகுதியே இல்ல - அமைச்சர் சேகர்பாபு
02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி