பள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..! குவியும் பாராட்டுகள்..

Aug 13, 2020, 2:18 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கனஜ்ஜூர் பகுதியை சேர்ந்த சோமசேகர்- லாவண்யா தம்பதியினர்.  இவர்களுக்கு 8 வயதில் ராம்சரண், 6 வயதில் மனோஜ் என்கிற 2 மகன்கள் உள்ளனர்.

சோமசேகரின் பிரதான தொழில் விவசாயம். இவர் கடந்த 15 ஆண்டுகளாக தன்னிடம் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். தற்போது 2 ஏக்கரில் புதினா மற்றும் கொத்தமல்லி பயிரிட்டுள்ளார். மேலும் நெல் நாற்று நடும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சோமசேகரின் மகன்கள் ஊரடங்கு காலத்தில் பள்ளி திறக்கப்படாத காரணத்தால் தனது தந்தைக்கு உதவியாக விவசாய பணிகள் செய்து வருகிறார்.

ஊரடங்கு காலத்தில் சிறுவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த சிறுவனின் செயல் பாராட்டும் விதமாய் அமைந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் பல பிரபலங்கள் டிக்டாக்கில் சமையல் செய்வது உடற்பயிற்சி செய்வது போன்ற பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் இந்த சிறுவர்கள் பொழுது போக்கில் ஆர்வம் காட்டாமல் தனது தந்தைக்கு உதவியாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முதுகில் மருந்து தெளிப்பானை கட்டிக்கொண்டு மருந்து தெளிப்பது, களையெடுப்பது, மண்வெட்டி கொண்டு நிலங்களுக்கி நீர் பாய்ச்சுவது, நெல் நாற்று நடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவர்களின் இந்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.