
கள்ளக்குறிச்சி திருக்கோவிலூரில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டத்துக்குப்பின் மதுவுடன் கூடிய அசைவ விருந்து தரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.திருக்கோவிலூரில் உள்ள திருமண மண்டபமொன்றில், ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாட்டில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் திமுகவின் முக்கிய பொறுப்பாளர்கள், மாவட்ட இளைஞரணி தொண்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.