தமிழகத்தில் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்ற பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது. இதற்கிடையே தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகிறார். பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் நிலையில் நாளை இரவு எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக தலைவர்கள் அமித்ஷாவை சென்னையில் வைத்து சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.