manimegalai a | Published: Jan 29, 2025, 6:49 PM IST
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 19 மாவட்டச் செயலாளர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. அதன்படி மதுரை, மயிலாடுதுறை, தர்மபுரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு தளபதி விஜய் செயலார்களுடன் நேர்காணலில் ஈடுபட வருகை தந்துள்ளார். விஜய் நீலாங்கரையில் உள்ள அலுவலகத்திற்கு காரில் வந்து சேர்ந்துள்ளார். இன்னும் சில மணிநேரத்தில், மற்ற மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.