Nov 25, 2019, 3:57 PM IST
தமிழக நாயுடு பேரவையின் சென்னை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை கொளத்தூர் 200 அடி ரோட்டிலுள்ள ஜே.பி.என்.அரங்கத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத் தலைவர், வழக்கறிஞர் குணசேகரன் மற்றும் தமிழக நாயுடு பேரவையின் மாநில முதன்மை ஆலோசகரும்,தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளருமான ராம மோகன்ராவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் .
மேலும் இதில் மாநில பொதுச்செயலாளர் திருவாரூர் பாலாஜி, மாநில துணைத்தலைவர் மெர்குரி சத்யா உட்பட தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் திறளாக கலந்து கொண்டனர். இதில் பேசிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தமிழ் நாட்டில் மூன்று சாதி கட்சிகள் தான் ஆளப் போகிறது என்றும் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் ஸ்டாலினை பற்றியும் அதிரடியாக பேசினார்.