Mar 2, 2023, 4:03 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், இடைத்தேர்தலில் தொடர்ந்த வெற்றி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் எனத் தெரிவித்தார்.