Apr 21, 2023, 6:19 PM IST
கர்நாடக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. பிரச்சாரத்திற்காக தேவனஹள்ளி பகுதியில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் அட்டை படம் வைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் மழை பெய்த நிலையில், அப்படங்கள் மழையில் நனைந்தன. அவற்றை ஒரு நபர் தன் துணியால் துடைத்தார். இதற்கு பணம் தருகிறார்களா என கேட்டதற்கு, பிரதமர் மோடி என் கடவுள் என்றும், அவரது விசுவாசத்திற்காக செய்கிறேன் என்றார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.