Jul 21, 2022, 2:21 PM IST
அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம், அலுவலக ஊழியர்கள் சேதமடைந்த பொருட்களை பார்வையிட்டனர், கடந்த 11 ஆம் தேதி பொதக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால் பொருட்களின் சேத விவரங்கள் தெரியாமல் இருந்தது. இதனையடுத்து அதிமுக அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில் அதிமுக அலுவலகத்தில் உள்ளே இருந்த பொருட்கள் மற்றும் கார்கள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து முன்னாள் அமைச்சர் சி,வி.சண்முகம் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சேதமடைந்த பொருட்களின் விவரங்களை அதிமுக தலைமை அலுவக நிர்வாகிகள் கணக்கெடுத்துள்ளனர். மேலும், ஜெயலலிதாவின் பரிசு பொருட்களை காணவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.