மும்பையில் இருந்து நடிப்பு பிழைப்புக்காக வந்த நடிகை குஷ்பு சேரி மொழி என்று கொச்சைப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என வீரலட்சுமி எச்சரித்துள்ளார்.

பாஜக மகளிர் அணி நிர்வாகியும், திரைப்பட நடிகையுமான குஷ்பு  வீட்டு அருகில் வசிக்கும் மக்களை சேரி மக்கள் என்றும், சேரி மொழி என்றும் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் முன்னேற்றப் படை தலைவர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி ஜான்சாமுவேல் உள்ளிட்ட பலர்  திருவள்ளூர் எஸ்பி பா.சிபாஸ் கல்யாணிடம் புகார் மனு அளித்தனர். 

தமிழ்மக்களை இழிவாகப் பேசிய குஷ்பு தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனவும் வீரலட்சுமி எச்சரித்தார். மேலும் மும்பையிலிருந்து நடிக்க பிழைப்பு தேடி தமிழகத்திற்கு வந்துவிட்டு, தமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்ளலாம் என்று பேசியது, விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று பேசியதற்கும்  கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனவே இனி நாவடக்கத்துடன் குஷ்பு பேச வேண்டும் என்றும் இல்லையேல் போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்தார்.

03:15சிக்கலில் 7 தமிழக அமைச்சர்கள்! லிஸ்ட் போட்ட அதிமுக! முதல்வருக்கு தலைவலி !
பெரியாரை விமர்சித்த சீமான்; உதயநிதியின் ரியாக்‌ஷன் இதுதான்!
தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நேர்காணல்! தளபதியின் என்ட்ரி வீடியோ
ஒரே குடும்பம் தான் திமுகவின் ஒரே கொள்கை! திமுக மீது வானதிஸ்ரீனிவாசன் கடும் விமர்சனம்!
இடை தேர்தலில் போட்டியிடாமல் ஓடும் 23ம் புலிகேசி!எடப்பாடி குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்!
விஜய் பரந்தூர் வர காரணமான சிறுவன் ராகுல்?யார் இந்த ராகுல்? சிறுவன் கூறியது என்ன?|Asianet News Tamil
திமுக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!!| Asianet News Tamil
பரந்தூர் மக்களை சந்திக்க கிளம்பிய த.வெ.க. தலைவர் விஜய்!நேரடி காட்சிகள்! Asianet News tamil
அண்ணா பல்கலை விவகாரம்:பொது மக்கள் கேள்விகளை கண்டு திமுக அரசு பயப்படுகிறது-அண்ணாமலை!
சென்னை மெட்ரோவுக்கு ரூ.43,000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை !!
Read more