Oct 30, 2023, 2:07 PM IST
கேரள மாநிலம் கொச்சி அருகே களமசேரி குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், களமசேரி குண்டுவெடிப்பு ஒரு சோகமான சம்பவம் என்றும், முதல்வர் தன்னை வகுப்புவாத விஷம் என்று குறிப்பிட்டதை அவர் தெளிவுபடுத்தினார். கேரள அரசியிலில் ஊழல் பிரச்சனை எழுப்பும் போது தங்களை வகுப்புவாதிகள் எனக்கூறி முதல்வர் பிரனாயி விஜயன் மறைக்கப்பார்க்கிறார் எனவும் குற்றம்சாட்டினார்.
கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஹமாஸ் அமைப்பினர் கலந்து கொண்ட விவகாரத்தை குறிப்பிட்ட அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர், நாசகார சக்திகளுக்கு எதிராக பேசுபவர்களை வகுப்புவாதிகள் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறுகிறார். இலத்தூர் சம்பவம் தீவிரவாத தாக்குதல் அல்ல என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். ஆனால், இதன் விசாரணையில் ஜாகிர் நாயக் குழுவின் பங்கு இருப்பது பின்னர் தெளிவாகியது. இந்த விவகாரங்களில் காங்கிரஸும் மௌனம் காக்கிறது. கேரள அரசியல் விவகாரங்களில் கேள்வி எழுப்பும் எங்களையும் வாக்கும்வாதிகள் என அரசு முத்திரை குத்துகிறது என ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டினார்.