Sep 30, 2022, 5:11 PM IST
புதுச்சேரியில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சூழலை சமாளிக்கும் வகையில் மாநில முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை இன்று நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் தமிழிசை பேசுகையில் மின்சார வாரியம் தனியார்மயமாவதால் அதில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. அவர்களுக்கு சட்டப்படி பணி பாதுகாப்பு வழங்கப்படும் என்று அளுநர் உறுதி அளித்துள்ளார்.