Sep 20, 2022, 7:55 PM IST
உத்தரப்பிரதேச மாநிலம், சஹரன்பூரில் இருக்கும் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் கபடி விளையாட்டு வீரர்களுக்கு ஆண்கள் கழிப்பறையில் வைத்து உணவு பரிமாறப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக இந்திய கால்பந்து வீரர் சுனில் ஷெட்ரியை புகைப்படம் எடுக்கும்போது, மேற்குவங்க மற்றும் மணிப்பூர் ஆளுநர் எல். கணேசன் தள்ளிவிட்ட வீடியோ வெளியாகி வைரலாகி இருந்தது. இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.