
உத்தரபிரதேசம் மாநிலத்தில் அரசு ஆரம்பப்பள்ளியில் பிஞ்சு குழந்தைகள் காற்று வீச ஆசிரியை ஒய்யாரமாக தரையில் படுத்து உறங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேசம் மாநிலம், அலிகார் மாவட்டத்தில் தானிபூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அரசு ஆரம்பப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆசிரியை ஒருவர் பாடம் நடத்துவதற்கு பதிலாக தரையில் படுத்துக் கொண்டு குழந்தைகளை தமக்கு காற்று வீசுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி பிஞ்சு குழந்தைகளும் ஆசிரியைக்கு காற்று வீசி உள்ளன.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.