Mar 2, 2023, 7:53 PM IST
கேரளா மாநிலம் பாலக்காடு அருகே அமைந்துள்ள குறும்ப பகவதி அம்மன் கோவில் விழாவில் நேற்று இரவு யானை மீது சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது திடீரென யானை மிரண்டு பாலக்காடு - எர்ணாகுளம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு இடையே ஓடியது. இதனால் அப்பகுதி பரபரப்பான நிலையில் கோவில் விழாவுக்கு திரண்டிருந்த மக்கள் 4 திசைகளிலும் சிதறி ஓடினர்.
சுமார் ஒரு மணி நேரம் மிரண்டு அங்கும் இங்குமாக யானை ஓடிய பின்பு அதன் பாகன்கள் யானையை ஆசுவாசப்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். யானை மிரண்டதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.