கொட்டும் மழையிலும் பக்தர்கள் பம்பையில் இருந்து சபரிமலைக்கு மலையேறிச் சென்றது நெகிழச் செய்வதாக இருந்தது.
சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதான பகுதிகளில் மழை பெய்தது வருவதால், அங்குள்ள நடை பந்தல் வரிசைகளில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் தரிசனத்திற்காக நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர். பலர் மழையையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்தனர். பம்பா உள்ளிட்ட பிரதான நதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.