Oct 19, 2019, 11:45 AM IST
பிராங்க் ஷோ எனப்படும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் பிரபலம் பல யூடியூப் சானல்களில் பிராங்க் செய்து அட்டகாசமாக செய்துவருகிறார்கள்.அந்த வகையில் தெலுங்கில் யூடியூப் சேனல் ஒன்றில் இளைஞர் ஒருவர் பணியில் இருந்த பெண் காவலரிடம் சென்று ஐலவ்யூ சொல்ல அதற்க்கு உன்னோட வயது என்ன என்னோட வயது என்ன எதற்கு பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்கானு கடைசி வரை வாதாடி அந்த பெண் காவலர் ஆத்திரமடைந்து ஸ்டேஷனுக்கு போகலாம் வா, என்று கூப்பிட அதற்கு அந்த இளைஞர் தான் ஒரு யூடியூபர் என்றும், உங்களது சகோதரி ஒருவர்தான் இவ்வாறு செய்ய சொன்னார் என்றும் கூறுகிறார்.
அதைக்கேட்டும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. கெட்ட,கெட்ட வார்த்தைகளில் அவரை திட்டுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.