ஆசிரியர் ஒருவருக்குப் பணியிடமாறுதல். எல்லோரிடமும் விடைபெற்றுச் செல்ல இருக்கிறார். ஆனால், அவரைச் செல்ல விடாமல் மாணவர்கள் அழுதுகொண்டே விடைகொடுக்க மறுக்கின்றனர். மாணவர்கள் தம்மீது வைத்திருக்கும் அன்பால், ஆசிரியரும் கண்ணீர் வழிய நிற்கிறார்.
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஆசிரியர் கோவிந்த் பகவான், அவரை மாணவர்கள் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு பிரியாவிடை கொடுக்க மறுத்து இந்த சமூகத்தையே திரும்பி பார்க்க வைத்த மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம் உத்தர பிரதேசம் சந்துளியில் நடந்துள்ளது.
அங்குள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்த ஆசிரியர் சிவேந்திர சிங், அவர் பணியிட மாறுதல் காரணமாக மாணவர்களிடம் கூறி பிரியாவிடை பெற பள்ளிக்கு வந்துள்ளார். ஆனால், மாணவர்களோ அவருக்கு பிரியாவிடை அளிக்க மறுத்து அவரை செல்ல விடாமல் கண்ணீர் மல்க பாச மழை பொழிந்துள்ளனர். ஆசிரியரும் மாணவர்களை அன்புடன் அரவணைத்து மாணவர்களை தேற்றிய காட்சி காண்போரையும் கண்ணீர் வர வைக்கிறது என்றால் அது மிகையாகாது.