Aug 28, 2022, 10:11 PM IST
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் சூப்பர் டெக் என்ற நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்ட இரட்டைக் கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் அபெக்ஸ் என்ற கோபுரம் 32 மாடிகளை கொண்டதாகும். இதன் உயரம் 328 அடியாகும். இதன் மற்றொரு கோபுரமான சியான் 31 என்பது 31 மாடிகளை உடையது.
இரட்டை கோபுரங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து அந்த இரு கட்டடங்களையும் இடித்து தள்ள உச்சநீதிமன்ம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணி அளவில் இக்கட்டிடம் தகர்க்கப்பட்டது.மூன்று நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் குழுவினர், 20,000 இணைப்புகளின் வழியே 40 மாடிகளிலும் வெடிப்பொருட்களை வைத்தனர். சுமார் 37,000 கிலோ வெடிபொருள்கள் கட்டிடங்களை இடிக்க பயன்படுத்தப்பட்டது. முழு கட்டிடமும் இடிக்க சுமார் 9 முதல் 10 வினாடிகள் ஆனது.