கேரளா மாநிலத்தில் சமைய விளக்குத் திருவிழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் போல் வேடமணிந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குளங்கர ஸ்ரீதேவி ஆலயத்தில் பல தலைமுறைகளாக சமைய விளக்கு என்னும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தக் கோவிலில் முதலில் பெண்கள் தான் வழிபாடு செய்து வந்துள்ளனர். பின்பு அம்மனின் சக்தியை தெரிந்து கொண்டதால் பின்பு ஆண்களும் பெண்கள் போல் வேடமிட்டு  அலங்காரம் செய்து வழிபாடுகள் செய்யவும் தொடங்கியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்த விழாவில் இந்தியாவிலிருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த கோவில் விழாவில் பெண்கள் போல் வேடமணிந்து, அலங்காரமும் செய்து  சமைய விளக்கு என்னும் சடங்கை செய்வது வருகின்றனர். அந்த வகையில் கடந்த 26ம் தேதி நடந்த கோவில் விழாவில் கலந்து கொண்ட ஆண்கள் - பெண்கள் போல் வேடம் அணிந்து கொள்ளை அழகுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

இவர்களுக்கு ஆடை- அலங்காரம் செய்வதற்காகவே ஏராளமான கலைஞர்களும் அதே பகுதியில் குவிந்தனர். வேண்டுதலுக்காக  வருபவர்களும், வேண்டுதல் நிறைவேறிய பின் நேர்த்திக்கடனை செலுத்த வருபவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வருகின்றனர். தன்னுடன் வரும் தனது மனைவியே தன்னை பார்த்து ஆச்சரியம் அடையும் அளவில் இவர்கள் அலங்காரம் இருக்கும். இதைப் பார்க்கும் பெண்களுக்கு ஆண்கள் மேல் மரியாதையும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இவர்களது அழகில் மயங்கிய பலரும் இவர்களுடன் நின்று புகைப்படங்களும் எடுத்து சென்றுள்ளனர்.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more