Live : சூரிய கிரகணம் - நேரலையில் கண்டுகளியுங்கள்!

Oct 25, 2022, 5:46 PM IST

பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம். சூரிய கிரகணத்தின்போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. ‛பகுதி சூரிய கிரகணம்' இன்று (அக்.,25) இந்தியா, ரஷ்யா, கஜகிஸ்தான், வட அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் காணலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் மும்பை, டில்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் சூரிய கிரகணம் மாலை 5 மணியளவில் பல பகுதிகளில் தெரிய துவங்கியது.