Jan 6, 2025, 7:32 PM IST
சீனாவில் மனித மெட்டாப்நிமோனியா வைரஸ் அதாவது HMPV வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 5 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.